காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக நடாத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.
பொதுமக்களின் வாழ்வுரிமைக்காக காலிமுகத்திடலில் நடாத்தப்படும் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 01 மணியளவில் கொழும்பு பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலி முகத்திடல் நோக்கி இந்த அடையாளப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நேரடியாக இந்த அடையாளப் பேரணியில் கலந்துகொள்வார்கள் எனவும், நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக் கழகங்களின் விரிவுரையாளரகள் அதே காலப் பகுதியில் அந்தந்தப் பல்கலைக் கழகங்களில் அடையாள போராட்டமொன்றை நடாத்துவார்கள் எனவும் எதிர்பார்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews