இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும், பிரதமருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் 20 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டப் படிப்பினையும், 22 வயதிற்குள் மருத்துவ பட்டப்படிப்பினையும் நிறைவு செய்வது குறித்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த கருத்து விவாதிக்கப்பட்டது.
இதன்போது, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு பல்கலைக்கழக கல்வியை தாமதப்படுத்த கூடாது எனவும், குறித்த பிரச்சினை எதிர்காலத்தில் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வேதன ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய அரச சேவையாளர்களின் வேதனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கும், வைத்தியர்கள் உட்பட தொழில் வல்லுனர்களிடமிருந்து வருமான வரி அறவிடுதலில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படும எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
#SrilankaNews
Leave a comment