அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராக இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள், திங்கட்கிழமை (30) நண்பகல் துறைமுக பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வரிக் கொள்கையினால் தாம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், வரிகளை நீக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
#SriLankaNews