களனி ஆற்றில் இனங்காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உயிரிழந்தவர் 5 அடி 5 அங்குல உயரம் மற்றும் கறுப்பு காற்சட்டை மற்றும் டி-சேர்ட் அணிந்திருந்தார். இதேவேளை சடலம் தெரணியாகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யட்டியாந்தோட்டை பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNEws
Leave a comment