எங்கள் ஆட்சியில் சமையலறையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது!- ரணில்

b1874651 9aa92aa5 52913258 ranil

எங்கள்  ஆட்சியில் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமன்றி,  வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம்.  சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்ருகையிலேயே இதனை சுட்டிக்காட்டி னார்.

2015 முதல் 2019 வரை நாட்டு பொருளாதாரம் எப்படி இருந்தது என ஆளுங்கட்சியின் எழுப்பிய கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரணில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், அக்காலத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது இல்லை மக்கள் அந்த காலப்பகுதியையே விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

மேலும் , அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பிலும் சபையில்  கேள்வி எழுப்பினார்.

#SriLankaNews

Exit mobile version