பயணிகளுக்கான தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டில் பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பயணத்தடை விதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. மாறாக பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றாளர் ஆபிரிக்காவின் தென்பகுதியில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து வருவோருக்கு பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
எனினும் இக்கட்டுப்பாடுகள் பயனற்றவை என ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் மோசமான நிலை உருவாக போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
#WorldNews
Leave a comment