இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடுகள்

Share
29 2
Share

இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடுகள்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு மேலதிக அனுசரணை வழங்க பல நாடுகள் இணைந்துள்ளன.

ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய முக்கிய அனுசரணை நாடுகளால் முன்னதாக இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், ஒக்டோபர் 4ஆம் திகதி நிலவரப்படி, அல்பேனியா, ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கொஸ்டாரிகா, குரோசியா, சைப்ரஸ், செக், டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லட்வியா, லீச்சென்ஸ்டென்ஸ்டீ , லிதுவேனியா மற்றும் லக்சம்பர்க் ஆகியன இந்த தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகளாக இணைந்துள்ளன.

மேலும், மலாவி, மோல்டா, மொண்டினீக்ரோ, நெதர்லாந்து நியூசிலாந்து, வடக்கு மெசிடோனியா, நோர்வே, போலந்து, போர்த்துக்கல்; ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பெரிய பிரித்தானியா¸ அமெரிக்கா மற்றும் வடக்கு அயர்லாந்து

மேலும், இலங்கையில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இந்த தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

A/u;RC/57/L.1 என்ற இந்த தீர்மானம், இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்த தீர்மானம் 51 – 1இல் உள்ள ஆணையை புதுப்பிக்கும் வகையில் ஆனது.

மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய 57ஆவது அமர்வின் போது முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானம், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51 – 1இல் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணை மற்றும் கோரப்பட்ட அனைத்து பணிகளையும் நீடிக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கை, பேரவையின் 60ஆவது அமர்வில் ஊடாடும் உரையாடலில் விவாதிக்கப்படும் என்று இந்த புதிய தீர்மானம் கூறுகிறது.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வு 2024 செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...