17 21
இலங்கைசெய்திகள்

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

Share

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.

சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, Terminally Ill Adults (வாழ்க்கை முடிவு) யோசனையின் இரண்டாம் வாசிப்பின்போது வாக்களித்தனர்.

இதன்போது 330 ஆதரவாகவும், 275 எதிராகவும் வாக்களித்த நிலையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலத்தை மாத்திரமே கொண்ட ஒரு பெரியவர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் தமது முடிவை அங்கீகரித்தால், தமது வாழ்நாளை முடித்துக்கொள்ள உதவி பெறலாம்.

இந்தநிலையில் குறித்த யோசனையை, சட்டமாக மாற்றுவதற்கு இன்னும் சில தடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொது மற்றும் பிரபுக்கள் சபையில் ((The Commons and the House of Lords) ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் வாசிப்பின்போது நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளனர்.

யோசனையின் மூன்றாம் வாசிப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் இல்லாவிட்டால், தாம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று அவர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...