நாட்டு எல்லைக்குள் இன்று டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார்.
இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்களுக்கான கடன் கடிதங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் தற்போது போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment