10 வயது இளம் பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்திய இருவர்

tamilnih 72

இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீஹகதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரிலே 20 மற்றும் 17 வயதுடைய இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் போது மீஹகதென்ன கும்ஒதுவ மற்றும் களுபஹன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் இருவரை விகாரைக்கு அழைத்து வந்த விகாராதிபதி புதிய தேரரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்துக்குரிய விகாராதிபதி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Exit mobile version