அனுமதி பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
பளை பகுதியிலிருந்து ஏ9 வீதி ஊடாக, யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு மாடுகள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாடுகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனத்தை பளை பொலிஸார் முகமாலை பகுதியில் இடை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றம் உதவியாளர் அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட 7 மாடுகளில் ஒரு மாடு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#srilankaNews