பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!
இலங்கைசெய்திகள்

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!

Share

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!

பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியை செலுத்திய மேலும் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் (11) அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி ஊசி ஏற்றிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருந்தார்.

யுவதியின் உடல் நீல நிறமாக மாறியதாகவும், இதனையடுத்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாதி ஒருவரால் இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தாயார் குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்நிலையில், யுவதியின் மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகள் உட்பட நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு 10 தொகுதிகளுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சில சந்தர்ப்பங்களில் சில மருந்துகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவ்வாறு ஒவ்வாமை வைத்தியசாலைகளில் ஏற்பட்டால் ஒவ்வாமையிலிருந்து காப்பாற்ற முடியும். சிலவேளைகளில் எம்மால் அவ்வாறு செயல்பட முடியாது.அந்த நிலைமையே பேராதனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ளது. இது துரதிஷ்டமான சம்பவமாகும். இருப்பினும் நாம் இதனை சாதாரண விடயமாக நினைக்கவில்லை. முழுமையாக அந்த மருந்துகளை அகற்றியுள்ளோம். அதனை நாம் பயன்படுத்த போவதில்லை. அதற்காக புதியதொரு மருந்தையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

புதிய மருந்தையே நாம் தற்போது பயன்படுத்துகிறோம். சோதனைகளின் போது தவறுகள் இடம்பெறலாம். அதனை நாம் மறுக்கவில்லை. மருந்து இறக்குமதி செய்த பிறகு அது தொடர்பில் பரிசோதிக்கும் முறைமை எம்மிடமுள்ளது. அதனையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்; நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படும் – பிரதமர் ஹரினி அமரசூரிய!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

1693715245 THONDAMAN 2
செய்திகள்அரசியல்இலங்கை

இ.தொ.கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் அதிகாரப்பூர்வ விளக்கம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதாக சமூக ஊடகங்களில்...

Karu Flood News Pix 03
செய்திகள்இலங்கை

சோமாவதி – சுங்காவில வீதி 3 அடி நீரில் மூழ்கியது: போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது....

inject 251215
செய்திகள்இலங்கை

‘ஒன்டன்செட்ரோன்’ தடுப்பூசியால் நோயாளிகளுக்குப் பாதிப்பு: சுகாதார அமைச்சுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் உடல்நலச் சிக்கல்கள்...