வாவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வாரியபொல, குருணவ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 34 வயதுடைய சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
#SriLankaNews