சூரியவெவ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவரே இன்று (08) அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றில் “காட்டு யானை தாக்கத்தை குறைக்காது விடின் பதவியை துறப்பபேன் ” என இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கூறி 24 மணித்தியாலங்களுக்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment