ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதினம் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
டொலர் பிரச்சினை, யுகதனவி உடன்படிக்கை உட்பட முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பங்குபற்றலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews