காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் இன்று தப்பியோட முயன்ற நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து அவர்கள் மீண்டும் பிடிபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பாதுகாப்பிலிருந்த அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு அவர்களைத் தடுக்கும் பொருட்டு வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் அச்சமடைந்த குறித்த இரு கைதிகளும், தப்பியோடும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே ஓடி வந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது தப்பியோட முயன்ற கைதிகள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிகிச்சைக்காகச் சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காலி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

