கடலில் மூழ்கி இரு குடும்பஸ்தர்கள் பரிதாப மரணம்!

neer3

நானுஓயா, கிளாரண்டன் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

மருதை ராமசாமி (வயது – 47), ஐயாகண்ணு விஸ்வநாதன் (வயது – 38) ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

கொழும்புக்குத் தொழிலுக்கு சென்றிருந்த இவர்கள், அங்கிருந்து முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்ற வழியில் கடலில் நீராடும்போதே அலையில் அள்ளுண்டு சென்று உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

#SriLankaNews

Exit mobile version