இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம், கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#srilankaNews
Leave a comment