நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு

24 665bdb69cc611

நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு

கம்பஹா (Gampaha) பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (1.6.2024) இரவு பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் பல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version