வவுனியாவில் ஐஸ் ரக போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்பாக குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 50 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews