கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

கஞ்சா

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட படகை சோதனைசெய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது படகில் இருந்த சந்தேக நபர்கள் கஞ்சா அடங்கிய பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.

எனினும் கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா போதைப்பொருள்களை மீட்டதோடு, படகில் இருந்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version