யாழில் வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!

image 2df7f53ce3

யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில் வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version