நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக, பெக்கோ இயந்திரத்துடன் வந்தவர்களுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசு அமைப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டு வந்தனர். இராணுவத்தினருக்கு அதிகாரம் இல்லாதிருந்தால், நாடாளுமன்றம் என்ற வெறும் கட்டிடமல்ல, நாட்டின் ஜனநாயகமே சிதைவடைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
” ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பட்டியலை தயாரித்திருந்தது. அந்த பட்டியல் தற்போது என்னிடம் உள்ளது. அதில் 118 வாக்குகள் டளஸ் அழகப் பெருமவுக்கும் அதைவிட குறைந்த வாக்குகளே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கிடைக்கும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது கட்சியினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரியாமலேயே, எதிர்க்கட்சித் தலைவர் செயல்பட்டுள்ளார்.” – எனவும் மனுச குறிப்பிட்டார்.
#SriLankaNews