1 1 19
இலங்கைசெய்திகள்

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : புடினுக்கு அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்

Share

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : புடினுக்கு அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்

சிரிய (syria)ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்(bashar al assad) நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்( Vladimir Putin) முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ” என அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப்(trump) கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பஷார் அல் ஆசாத் சிரியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுவரை அவரை பாதுகாத்து வந்த புடின் தலைமையிலான ரஷ்யா, அவரை பாதுகாக்கவில்லை. சிரியா மீதான ஆர்வத்தை ரஷ்யா விட்டுவிட்டது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த போர் தொடங்கி இருக்கக்கூடாது. இத்தனை நாட்கள் நீடிக்கவும் கூடாது. உக்ரைன் போர் மற்றும் மோசமான பொருளாதாரம் காரணமாக ரஷ்யா பலவீனமாக உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் மற்றும் அதன் வெற்றி காரணமாக ஈரானும் பலவீனமாக உள்ளது.

போரை நிறுத்த ஜெலன்ஸ்கியும்(Volodymyr Zelenskyy) உக்ரைனும்(ukraine) ஒப்பந்தம் போடவேண்டும். அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் என நான்கு லட்சம் பேரை இழந்துள்ளனர். அங்கு உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

தேவையில்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி உள்ளன. பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இது தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாக தான் அமையும்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...