“மக்களின் கோரிக்கைகளைக் காட்டிக்கொடுத்தது யார்? இப்போது புரிந்துகொள்ள முடியும்.”
– இவ்வாறு அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சபாநாயகரிடம் நேற்றுக் கையளித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்நாட்டு மக்கள் கோரும் வெற்றிக்காக இன்று தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக அரசு மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுகின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைகளில் கையொப்பமிடாத மற்றும் ஆதரவளிக்காத மக்கள் பிரதிநிதிகள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண முடியும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment