முட்டையுடன் வந்த லொறி விபத்து!

download 12 1 2
ஒரு தொகை கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு பண்டுவஸ்நுவரவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கல்கமுவ திவுல்வெவ பகுதியில் வீதியைவிட்டு விலகி மதகில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லொறியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகள் இருந்ததாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

#srilankaNews

Exit mobile version