ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

இலங்கை டிரினிடாட் மற்றும் டொபாகோ இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை

Share

டிரினிடாட், டொபாகோ! ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை!

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு அண்மையில் இலங்கையுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முறைப்படுத்தும் என்று டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் தெரிவித்தார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் நேற்று (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவதன் மூலம் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

புதுடில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் உயர் ஸ்தானிகர், ஜூன் மாதம் 30 ஆந் திகதி கண்டியில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

இதன்போது, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழில், கரும்பு மற்றும் ஏனைய விவசாயப் பொருட்கள் போன்ற புதிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உயர் ஸ்தானிகருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இரு நாடுகளினதும் வெளிநாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு இடையில், பணமோசடி செய்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பவர்கள் மற்றும் ஏனைய குற்றவியல் அமைப்புகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக, டிரினிடாட் மற்றும் டொபாகோ நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...