யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி!

IMG 20230518 WA0048
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  இன்று மாலை 2:30 மணியளவில்  யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபி யில் இடம்பெற்றது.
இதன் பொழுது பொதுசுடர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட  பீடாதிபதி  பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்சியாக
ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது
தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
#srilankaNews
Exit mobile version