யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனுக்கு அஞ்சலி

IMG 20210926 WA0042

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபன் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவொறுப்பில் ஈடுபட்டு தன்னுயிரை தமிழின மக்களுக்காக நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தடைகளையும் தாண்டி திலீபனுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்தி

கெடுபிடிகளுக்கு மத்தியில் சிவாஜிலிங்கம் திலீபனுக்கு அஞ்சலி

https://tamilnaadi.com/news/local/2021/09/26/tribute-to-shivajilingam-dilipan-in-the-midst-of-atrocities/

Exit mobile version