பகிடிவதை விசாரணைகள் சிஐடிக்கு மாற்றம்

z p01 cid

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version