13
இலங்கைசெய்திகள்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம் : பழிவாங்கும் செயற்பாடா…

Share

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம் : பழிவாங்கும் செயற்பாடா…

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த  இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றங்களை முன்னாள் ஆளுநரின் செயலாளரும் தற்போதைய ஆளுநரின் செயலாளருமான நந்தகோபனின் அறிவுறுத்தலின் பிரகாரம் வழங்கப்படுவதாக அறியக் கிடைக்கின்றது.

இருந்தும் தற்போதைய ஆளுநரின் செயலாளர் நந்தகோபனை மாற்றி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரனை தனது செயலாளராக நியமிப்பதற்கு ஆளுநர் விருபம்புவதாக அறியக் கிடைக்கிறது.

வட மாகாண புதிய ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவதற்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...