இடமாற்றக் கடிதங்கள் அனுப்பிவைப்பு!

Education 2

ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.

கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version