எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்திய பின்னர் செவ்வாய் முதல் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பஸ் கட்டணங்களுக்கு நிகராக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
#SriLankaNews