இலங்கைசெய்திகள்

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி

Share
rtjy 242 scaled
Share

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி

ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி பலத்த காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையங்களுக்கு இடையில் களுத்துறை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடருந்து பெட்டிகளில் அதிகளளவில் பயணிகள் இருந்தமையினால் மிதிபலகையில் வெளியில் தொங்கியபடி சென்ற போது ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...