யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் தொடருந்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சூசைநாதன் பிரதீபன் (சுரேன்) என்பவரே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews