இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

LSg98264f4ZfNjw62KD3 1
Share

பெந்தோட்டை – தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும், உறங்கிக் கொண்டிருந்த சிசுவிடம் வித்தியாசம் காணப்பட்டதையடுத்து, பெந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து பெந்தோட்டைவைத்தியசாலையினால் இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் பெந்தோட்டை பொலிஸாரும் பஹல்கமஹா மரண விசாரணை அதிகாரி கே.வி.டி.உபாலி குமாரசிங்கவும் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...