போராட்டத்துக்கு பொலிஸ் அதிகாரி ஆதரவு

IMG 20220709 123543

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர், அதிரடியாக சினிமா பாணியில் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த, போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர், சைக்கிளை ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, போராட்டத்துக்கு வெற்றி என கோஷமெழுப்பி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

போராட்டக்காரர்களுடன் இணைந்து அவர் சிறிது தூரம் பேரணியாக பயணித்துள்ளார்.

Exit mobile version