யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலை சீர்குலைக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒழிக்கும் நோக்கில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு யுக்திய சுற்றிவளைப்பினை இடைவிடாத நடவடிக்கையாக மேலும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நடவடிக்கை இந்த வாரம் நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் அனைத்து காவல் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த காலப்பகுதியில் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனை செய்யும் விசேட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.