யாழ் முற்றவெளியில் பாரம்பரிய  உணவுத் திருவிழா!

download 1 11
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஏப்ரல்15,16 ம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய  உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில்  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மாலை நேரங்களில் இந்த உணவு திருவிழா இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை  உணவு திருவிழா இடம்பெறவுள்ளது
உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய உணவு திருவிழாவை மேற்கொள்வதன் மூலம் அருகி வருகின்ற எமது நடைமுறைகள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை எமது இளைய சமுதாயத்திற்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஏனையோருக்கும்   அறிமுகப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
அந்த வகையில்  மாலை வேளையில் பாரம்பரிய வாத்தியங்களை கொண்ட இசை நிகழ்ச்சியும்  மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்து பயன்பெறுமாறு அறிவித்துள்ளார்.
#srilankaNews
Exit mobile version