வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் களனி, கொள்ளுவத்தை – பிலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு குறித்த வர்த்தகர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் நுழைந்த நபர் ஒருவர் இந்தக் கொலையை மேற்கொண்டதுடன், அங்கிருந்த உடைமைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர் 69 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, களனி வலயத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழான குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment