யாழில் இலங்கை வங்கி ஊழியர்களால் தொழிற்சங்க போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், தொழிற்சங்க போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய முன்றலில் இடம்பெற்றது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் நாடுபூராகவும் தற்போதுள்ள அரசுக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் இன்றைய தினம் பொது மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த போராட்டத்திற்கு தற்போதுள்ள அரசாங்கம் செவி சாய்க்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

IMG 20220428 WA0040

#SriLankaNews

Exit mobile version