இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவிரைவில் ஒரு மில்லியனை எட்டிப்பிடிக்கும் நிலையை நெருங்கியுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 லட்சத்து 30 ஆயிரத்து 794 பேர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.
ஐரோப்பாவில் குளிர்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனினும் நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரம் பேரளவிலான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வருகை தந்து கொண்டிருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.