சுற்றுலாப் பயணிகள் அவதி!!

image e0ed299b2d

வே​லை நிறுத்தத்தினால் சுற்றுலாப் பயணிகளும் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் நுவரெலியாவுக்கு வருகைதந்தனர்.

பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளுடன் அவர்களை வழிநடத்தும் இலங்கையைச் சேர்ந்த வழிநடத்துனர்கள் சிலரும் இருந்தனர்.

பஸ்களில் நுவரெலியாவுக்கு செவ்வாய்க்கிழமை (14) வருகைதந்த அவர்கள், நுவரெலியாவில் பழைய தபால் காரியாலயத்தை பார்வையிட்டதன் பின்னர்,  நானுஓயாவில் இருந்து எல்லைக்கு ரயிலில் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.

எனினும், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தாங்கள் திட்டமிட்டிருந்ததன் பிரகாரம், சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளமுடியவில்லை என மனம் நொந்துகொண்டனர் என்றம் வழிகாட்டியினர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version