24 66495ab04d2f7
இலங்கைசெய்திகள்

கருமேகங்களால் சூழ்ந்திருக்கும் வானம்: முன்னெச்சரிக்கை

Share

கருமேகங்களால் சூழ்ந்திருக்கும் வானம்: முன்னெச்சரிக்கை

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...