இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews