tamilnaadi scaled
இலங்கைசெய்திகள்

​இன்றைய ராசி பலன் 04.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

​இன்றைய ராசி பலன் 04.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 4, 2024, குரோதி வருடம் சித்திரை 21, சனிக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள புனர்பூசம், பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடு மேம்படும். இன்று உங்களின் சொந்த வேலையை விட மற்றவர்களின் வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறீர்கள். இன்று எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கவும். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் துணையின் நல்லாதரவு இருக்கும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆரோக்கியம் மிகச் சிறப்பானதாக இருக்கும். எதிர்பாராத நற்பலன்கள் கிடைத்து மனமகிழ்ச்சி பெறுவீர்கள். தொழில் விஷயத்தில் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்புகிறேன் ஆலோசனையை பெற்று செயல்படவும். பயணங்கள், வண்டி வாகன பயன்பாட்டில் விஷயத்தில் கவனம் தேவை.இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் பெரிய சாதனையை படைப்பீர்கள். வணிக விஷயத்தில் நல்ல லாபம் உண்டாகும். அதே சமயம் பெரிய லாபத்தை தேடும் முயற்சியில் எளிதாக கிடைக்கும் லாபத்தை இழக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். உங்களின் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். உற்சவ பக்தர்கள் மேலதிகாரிகளின் மனதை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் சொல், செயலில் கவனம் தேவை. பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இன்று உங்களின் பெற்றோர் மூலம் பண பலன்கள் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட இன்று மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். காதல் விஷயத்தில் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று முதலீடுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வேலையை குறித்து நேரத்தில் முடிக்க முடியும். அன்றாட பணிகளில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று விவேகத்துடன் முடிவு எடுக்க வேண்டிய நாள். கண்மூடித்தனமாகப் பிறர் சொல்வதை நம்ப வேண்டாம். இன்று குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பழைய தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொள்கிறீர்கள். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய நாள். இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பண ஆதாயம் உண்டாகும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். வேலையில் அழிவு வேர்வை எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிகளில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். உங்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். நெருங்கியவர்களுடனான நல்லுறவை பேணுவது அவசியம். உங்களின் இனிமையான பேச்சாளர் பிறரின் மனதை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் அன்பான தருணங்களைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாள். புதிய நண்பர்கள், பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு வருமான ஆதாரங்கள் உண்டாகும். ரத்த உறவுகள் வலுவடையும். ஆக்கப்பூர்வமான பணிகளில் முழு ஈடுபாடு இருக்கும். உங்கள் தொழிலில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களின் குடும்பம் மற்றும் பணி சூழல் இனிமையானதாக இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை குறித்து நேரத்தில் முடித்து நிம்மதி அடைவீர்கள். தொண்டு பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாணவர்கள் அறிவார்ந்த மற்றும் மன சுமையிலிருந்து விடுபடுவது அவசியம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று பெரிய சாதனை படைத்த மன உணர்வு இருக்கும். உங்களின் சுயமரியாதை உணர்வு அதிகரிக்கும். பிறர் உங்களுக்கு தர வேண்டிய பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான கவலைகள் நீங்கும். கடினமான சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்களின் நல்ல ஆதரவு மன உறுதியை தரும். உங்களின் வணிக நடவடிக்கைகள் மேம்படும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன் தரக்கூடிய நாள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்க நல்ல லாபம் கிடைக்க கூடியதாக இருக்கும். உங்களின் பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் அனுபவத்தின் உதவியாள், கடினமான வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று யார் என் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதை தவிர்க்கவும். உங்கள் பேச்சில் நிதானம் அவசியம்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...