சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியத் தூதுவருடன் சந்திப்பு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு அழைப்பு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பங்குகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்துக்குத் தமது ஒத்துழைப்பை வழங்கும் முகமாக நாளை (28) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு ஆதரவைத் தெரிவித்து அரசுக்குத் தொடர்ச்சியான அழுத்தத்தை வழங்கும் முகமாகவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது” – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...