இன்று காலை கண்டி வீதி – கொடிகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது
கொடிகாமம் சந்தியைக் கடக்க முயன்ற டிப்பர் வாகனம், வெக்க கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சந்தைக்கு கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இருப்பினும் கட்டடத்துடன் மோதிய டிப்பர் வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.
கொடிகாமம் சந்தியில் ஒளிச் சமிஞை விளக்கு நேர எல்லை முடிவடைய இருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக வந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் வேவமாக சந்தியை கடக்க முயற்சித்த நிலையில் நேரம் முடிவடைந்தது.
இந்நிலையில், முன்னே பயணித்த டிப்பர் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது.
அந்த வாகனத்துக்கு பின்னே வேகமாக வந்த மற்றைய டிப்பர் வாகனம் நிறுத்த முற்பட்ட நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமம் சந்தை கட்டடத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews