அரச நிறுவனங்களுக்கு கால அவகாசம்

gover

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இதனைத் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version