நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

RAINFALL IN ODISHA WEBSITE

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என  எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் தற்போது காணப்படும் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில்  தாழமுக்க பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் நிலவுவதாக குறித்த திணைக்களம் அறிவிப்புவிடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் பெய்யும் வேளையில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version